திருவெறும்பூரில் கிளை நீதிமன்றம் அமைக்க வேண்டும்- *முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதியிடம், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை!
திருச்சி, திருவெறும்பூரில் கிளை நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சந்தித்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கிளை நீதிமன்றங்கள் உள்ள நிலையில், எனது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியிலும் கிளை நீதிமன்றம் அமைத்து தர ஆவண செய்ய வேண்டுமென அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed.