தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் போலீஸ் வீட்டுவசதி துறை டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் இன்று (ஆக. 29) பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள்.இவர்களுக்கு இன்று மாலை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வழியனுப்பு விழா நடைபெற உள்ளது. புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபி நியமனம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இடைக்கால பொறுப்பை நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமன் ஏற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏற்கனவே ஓய்வு பெற்ற டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சஞ்சய் அரோரா, போலீஸ் ஐஜி ஆசியம்மாள், தற்போதைய ஓய்வுபெறும் சங்கர் ஜிவால், சைலேஷ் குமார் யாதவ் – இந்த நால்வருக்கும் விரைவில் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று போலீஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன.
Comments are closed.