Rock Fort Times
Online News

2.49 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு…

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி நடைபெற்றது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, உதவி ஆணையர், உதவி இயக்குநர், உதவி வனப் பாதுகாவலர் உள்ளிட்ட 70 காலியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 2.49 லட்சம் பேர் எழுதினர்.இந்த நிலையில் ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்- 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை https://tnpsc.gov.in/document/finalresult/04_2025_GR_I_PUB_LIST_28.08.2025.pdf என்ற இணைப்பை கிளிக் செய்து, காணலாம்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்