திருச்சி, ஏர்போர்ட் அண்ணா நகர், வ.உ.சி.தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் சூர்யா (வயது 23). பி.இ.முடித்துள்ள இவர், பிரபல வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சர்வீஸ் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாத்தூர் பகுதியில் உள்ள ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்தப் பழக்கம் காதலாக மாறியது. பின்னர் அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 14.5.2025 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
மகிழ்ச்சியாக சென்ற இல்லற வாழ்க்கையில் புயல் வீசியது. புதுமண தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பவித்ரா கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால், வாழ்க்கையில் விரக்தி அடைந்த சூர்யா, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.