Rock Fort Times
Online News

3 நாட்கள் சுற்றுப்பயணம்: விமானம் மூலம் திருச்சி வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே எழுச்சி உரையாற்றி வருகிறார். அந்தவகையில் திருச்சியில் இன்று (ஆகஸ்ட் 23) முதல் 25ம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றுகிறார். இதற்காக எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, காமராஜ், வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் ப. குமார்( திருச்சி தெற்கு), மு.பரஞ்சோதி( வடக்கு), ஜெ.சீனிவாசன் ( மாநகர்), கழக அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல், முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், விமான நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதிக்கு கார் மூலம் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர் இன்று மாலை திருவெறும்பூர், திருச்சி கிழக்கு மற்றும் லால்குடி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்து சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளும் திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்