Rock Fort Times
Online News

டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் அனுமதி இல்லை… மத்திய அரசு திட்டவட்டம்..!

இந்தியா – சீனா இடையே உறவு வலுப்பெற்று வர துவங்கியுள்ள நிலையில் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள டிக்டாக் செயலியை மீண்டும் அனுமதிக்க போவதாக வந்த செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ‘டிக் டாக்’ எனப்படும், சீன நிறுவனத்தின் மொபைல்போன் செயலியில் பதிவாகும் தகவல்கள், சீன அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதாக புகார் எழுந்தது. 2020ம் ஆண்டில் இந்திய -சீன எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் நம் ராணுவ வீரர்கள் பலியாகினர். இதையடுத்து இந்தியாவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்கிறார். இதன் மூலம் இந்தியா – சீனா இடையேயான உறவு வலுப்பெற தொடங்கி உள்ளதால் மீண்டும் டிக்டாக் செயலியை மத்திய அரசு அனுமதிக்கப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘டிக் டாக்’ தடையை நீக்கும் எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை. இது சம்மந்தமாக வெளியாகும் அறிக்கையும், செய்தியும் தவறானது என தெரிவித்துள்ளது.
*

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்