ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இரவு நேரங்களில் ஒளிரப் போகும் அலங்கார மின் விளக்குகள்…! * காணொளி காட்சி மூலம் பணிகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது மான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு நாள்தோறும் . ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் இரவு நேரங்களில் பல வண்ணங்களில் ஒளிரும் வகையில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது ரூ. 8.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று( ஆகஸ்ட் 22) சென்னையில் இருந்தவாறு ஒளிரும் விளக்கு பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது ஸ்ரீரங்கம் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, இணை ஆணையர் சிவராம்குமார், கோவில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். அப்போது கோவில் கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், வெங்கடேசன், பரந்தாமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Comments are closed.