தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. வார விடுமுறை வழங்க, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுதொடர்பான அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஊராட்சிகளில் வீடு தோறும் குப்பைகளை சேகரம் செய்வதற்காக வெளிநிரவல் முறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலமாக தூய்மை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பார்வையில் கண்ட கடிதத்தில் தூய்மை காவலர்களுக்கு விடுமுறை மற்றும் விடுப்பு குறித்து கோரிக்கை வரப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக, கீழ்கண்டவாறு தெளிவுரை வழங்கப்படுகிறது. தூய்மை காவலர்கள் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒருநாள் விடுப்பு கொடுக்கலாம். இதற்கு மேல் கூடுதலாக விடுப்பு தேவைப்படின் அவர்களுக்கு ஒருநாள் விடுப்பு கொடுக்கலாம். இதற்கு மேலும் கூடுதலாக விடுப்பு தேவைப்படின் அவர்களுக்கு ஒருநாள் ஊதியமாக ரூ.160 பிடித்தம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.