Rock Fort Times
Online News

முதல்வரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த விஜய்க்கு மக்கள் தேர்தல் நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள்- அமைச்சர் கே.என்.நேரு…!

திருச்சி கலையரங்கத்தில் “பேர் ப்ரோ 2025” என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் மனைகளின் கண்காட்சி இன்று(22-08-2025) தொடங்கியது. இந்த கண்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,

திருச்சி காந்தி மார்க்கெட் தற்போது உள்ள இடத்தில் தான் செயல்படும். அது இடமாற்றம் செய்யப்பட மாட்டாது. முதல்வரை அங்கிள் என குறிப்பிட்டு விஜய் விமர்சனம் செய்துள்ளாரே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், விஜயின் தராதரம் அவ்வளவு தான். ஒரு மாநிலத்தின் முதல்வர், பெரிய கட்சியின் தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் உள்ளவர் மு.க.ஸ்டாலின். நேற்று அரசியலுக்கு வந்தவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார். அவருக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். ஒரு மாநில முதலமைச்சரை எது வேண்டுமானாலும் பேசுவது எப்படி சரியாக இருக்கும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்