திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க வேண்டும்- * மத்திய அமைச்சர்களிடம் திருச்சி எம்பி துரை வைகோ நேரில் வலியுறுத்தல்!
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோரை நேரில் சந்தித்து திருச்சியில் உலர் துறைமுகம் உள்நாட்டு கொள்கலன் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்து வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலி யாவை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தார். இதுகுறித்து துரை வைகோ எம்.பி தெரிவிக்கையில், ‘தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி சிறந்த விமான, சாலை மற்றும் ரயில் இணைப்புகளைக் கொண்டிருப்பதால், உலர் துறைமுகத்திற்கு மிகவும் ஏற்ற இடமாக உள்ளது.திருச்சியில் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உலர் துறைமுகம் அமைக்கப்பட்டால் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதுடன் நிலையான ஏற்றுமதி வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவும். மேலும், மணப்பாறை அருகே உள்ள சிப்காட் தொழிற்பூங்கா அல்லது நெடுஞ்சாலை இணைப்பு கொண்ட பிற இடங்களில் 100 ஏக்கர் நிலத்தை இதற்காக அடையாளம் காண முடியும் என ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன என்று விளக்கினேன். இவற்றைக் கருத்தில் கொண்டு, திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன் என்று தெரிவித்தார்.
Comments are closed.