Rock Fort Times
Online News

தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது கனவா?* 3, 665 காலி பணியிடங்களுக்கு நவ. 9ம் தேதி தேர்வு…!

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு, உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த 2024-ம் ஆண்டு காவல்துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில், 10-ம் வகுப்பு முடித்து காவல்துறை பணிக்கு காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,833 இரண்டாம் நிலை காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 631 தீ அணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,200
முதல் 67,100 வரை வழங்கப்படும். இதற்கு நாளை( ஆகஸ்ட் 22) முதல் வரும் செப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு நவம்பர் மாதம் 9ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முழு விவரங்களை https://www.tnusrb.tn.gov.in/என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்