பள்ளிகளுக்கு இடையேயான “என்துசியா-2025” கலை நிகழ்ச்சி போட்டிகள் திருச்சி கே.ராமகிருஷ்ணன் கல்லூரியில் ஆகஸ்ட் 19ம் தேதி நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
திருச்சி, காட்டூர் மாண்போர்ட் பள்ளியின் சார்பில் 72 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்கள் தனிப்பாடல், குழு பாடல், பாரம்பரிய நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம், சினிமா, பொழுதுபோக்கு, பானை அலங்காரம், ஓவியம், பென்சில் ஓவியம் வரைதல் போன்ற 22க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், 9 போட்டிகளில் முதல் பரிசையும், 3 போட்டிகளில் மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர். போட்டியின் இறுதியில் “என்துசியா-2025” க்கான ஒட்டுமொத்த சுழற்கோப்பையையும் வென்றனர். மேலும், கூடுதல் பெருமையாக “பெஸ்ட் சப்போர்ட்டிங் ஸ்கூல்” என்ற சிறப்பு விருதினையும் மாண்போர்ட் பள்ளி வென்றது. சாதனை படைத்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களையும் பள்ளி முதல்வர் சகோதரர் ராபர்ட் வெகுவாக பாராட்டி வாழ்த்தினார்.
Comments are closed.