நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் களம் காண்கிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறம் இருக்க த.வெ.க. முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பரப்பதில் நாளை (21-08-2025) பிரமாண்டமாக நடைபெறுகிறது. 506 ஏக்கரில் மாநாட்டு திடல், 2 பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பெண்களுக்கான “பிங்க் ரூம்” வசதி என ஒவ்வொன்றையும் மேற்பார்வையிட மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு முகப்பில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, மாநாடு தொடங்கும் போது அதை விஜய் ஏற்றி வைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக கொடிக்கம்பம் ராட்சத கிரேன் மூலம் நடப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கீழே விழுந்தது. தவெக நிர்வாகியின் கார் மீது கொடிக்கம்பம் விழுந்தது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதனைத்தொடர்ந்து கொடிக்கம்பத்தை மீண்டும் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
Comments are closed.