Rock Fort Times
Online News

ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்…!

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ நிறுவனம் உள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் சிம்கார்டுகளை இந்தியாவில் பல கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். துவக்கத்தில் மலிவு விலையில் ரிசார்ஜ் கட்டணங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்த ஜியோ நிறுவனம் பிறகு கட்டணங்களை படிப்படியாக உயர்த்த ஆரம்பித்தது. தற்போது வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஜியோ நிறுவனத்தின் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணமாக இருந்த ரூ. 249 கட்டணத்தை ரூ.299 ஆக உயர்த்தியுள்ளது. ரூ.299 ரீசார்ஜ் செய்தால் தினமும் 1.5 ஜிபி இண்டெர்நெட் மற்றும் வரம்பற்ற கால்கள் பெறும் சேவை தற்போது ஜியோ நிறுவனத்தின் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ஆகியுள்ளது. 249 ரூபாய்க்கு ஒரு ஜிபி டேடா வசதியுடன் அளிக்கப்பட்டு வந்த இந்த பிளான் நிறுத்தப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. குறைந்தபட்ச மாதாந்திர பேக் ரூ.249 (தினமும் ஒரு ஜிபி) பிளானை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. எனினும், இதற்கு பதிலாக கட்டண உயர்வுடன் இந்த பிளான் அமல்படுத்தப்படுமா என்பது பற்றி தெரியவில்லை.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்