Rock Fort Times
Online News

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆக.21) மின்தடை செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!

திருச்சி, சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (ஆக. 21) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சமயபுரம், மண்ணச்சநல்லூர் சாலை, வெங்கங்குடி, வ.உ.சி.நகர் பூங்கா, எழில் நகர், காருண்யா சிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவி மங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், வலையூர், கரியமாணிக்கம், பாலையூர், தெற்கு எதுமலை, கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூர், மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர் நகர், கூத்தூர், நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, பனமங்கலம், குமரகுடி, அழகிய மணவாளம், அத்தாணி, திருவரங்கப்பட்டி, கோவத்தக்குடி, மான்பிடிமங்கலம், சாலப்பட்டி, எடையப்பட்டி, அய்யம்பாளையம், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆர். செல்வம் தெரிவித்துள்ளார்.

இதேபோல,
திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், எடமலைபட்டிபுதூர் துணை மின்நிலையத்தில் நாளை வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக டிஎஸ்பி கேம்ப், கிராப்பட்டி காலனி, ஜோசப் காலனி, ஆரோக்கிய நகர், இளங்காட்டு மாரியம்மன் கோவில் தெரு, அன்பு நகர், அருணாச்சல நகர், காந்தி நகர், பாரதி நகர், சிம்கோ காலனி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்