திருச்சி நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா:* மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தேசியக்கொடி ஏற்றினார்…!
இந்தியாவின் 79- வது சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் தேசியக் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அதனைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்,பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக சார்பு நீதிபதி பிரபு வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் கார்த்திகா, சுவாமிநாதன், வெங்கடேசன், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் எஸ்.பி. கணேசன், செயலாளர் சி.முத்துமாரி, துணைத் தலைவர் வடிவேல்சாமி, இணைச் செயலாளர் விக்னேஷ், குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், துணைத் தலைவர் வரகனேரி சசிக்குமார், வழக்கறிஞர்கள் எழிலரசி, பிரகாஷ், இந்திராகாந்தி, ஜேசு பால்ராஜ், கங்கைச் செல்வன், புவனேஸ்வரி, சேது மாதவன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சௌமியா மேத்யூ, இரண்டாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் கலைவாணி ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நசீர் அலி நன்றி கூறினார்.
Comments are closed.