திருச்சி மாநகராட்சியில் சுதந்திர தின விழா: சிறப்பாக பணியாற்றிய 27 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார், மேயர் மு.அன்பழகன்…!
இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) மேயர் மு.அன்பழகன், துணை மேயர் ஜி. திவ்யா தனக்கோடி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணி செய்த 27 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தலா ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிபெண்கள் பெற்ற மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்களின் குழந்தைகள் 6 முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் ரொக்கமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார். மேலும், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய நகர் நல அலுவலர், உதவி ஆணையர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், சுகாதார அலுவலர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 57 நபர்களை கௌவுரவித்து பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினார். சிறப்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் எடமலைப்பட்டிபுதூர் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மேயர் அன்பழகன் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். பின்னர் அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு, காந்தி சந்தை அருகில் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு காந்தி மார்க்கெட் வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார். விழாவில் துணை ஆணையர் .கே.பாலு, நகரப் பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மு.மதிவாணன் ஆண்டாள் ராம்குமார், த.துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா, நகர்நல அலுவலர் மா.விஜயசந்திரன், செயற்பொறியாளர்கள் கே.எஸ்.பாலசுப்ரமணியன், மா.செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற் பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
Comments are closed.