ரியல் எஸ்டேட் தொழிலை அரசு முறைப்படுத்த வேண்டும்…* தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் பொதுக்குழு மற்றும் ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி திருச்சி, முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அசோசியேசன் மாநிலத் தலைவர் எம்.கே.கமலக் கண்ணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஆர்.ஸ்டாலின், மாநில பொருளாளர் மலேசியா ஆர்.மணி, மாநில அவைத்தலைவர் எஸ்.அமீருதின், மாநில கூடுதல் செயலாளர் ஏ.சக்கரவர்த்தி, மாநில துணை பொருளாளர் ஏ.எம்.ரோஸ் நவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரியல் எஸ்டேட் முகவர்கள், மீடியேட்டர்கள், பில்டர்ஸ், புரோமோட்டர்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நாட்டின் முக்கிய தொழிலான ரியல் எஸ்டேட் தொழிலை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வணிகத்தில் ஈடுபடும் முகவர்கள், மீடியேட்டர்கள், பில்டர்ஸ், புரோமோட்டர்ஸ் ஆகியோர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்க வேண்டும். அவர்களின் தொழில் தரத்தை உயர்த்தவும், மீடியேட்டர்களின் கமிஷன் தொகையை 2 சதவீதத்திலிருந்து 3 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ரியல் எஸ்டேட் வணிகர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வேண்டும். வங்கிகள் சம்பந்தமான கடன் உதவி செய்து தர வேண்டும். வியாபார கமிஷன் சம்மந்தமான சங்கத்தில் எழுத்து பூர்வமாக சங்க உறுப்பினர்கள் தெரிவித்தால் சங்கம் முன்னின்று சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு கமிஷன் தொகை பெற்றுத்தரப்படும் என மாநிலத் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தெரிவித்தார். கூட்டத்தில் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பிளட் ஷாம் மற்றும் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.