தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நகை பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சென்னையில் இன்று (ஆகஸ்ட் 8) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.75,760க்கு விற்பனை ஆகிறது. இதுவே தங்கம் விற்பனையில் உச்ச விலை ஆகும். சர்வதேச நிலவரங்களால், நம்நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,380 ரூபாய்க்கும், சவரன் 75,040 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று (ஆக.7) தங்கம் விலை, கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 9,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 75,200 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.75,760க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை முதல்முறையாக, புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.75,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 8 நாட்கள் தங்கம் விலை நிலவரம்:
* இன்று ஒரு சவரன்: ரூ.75,760
* நேற்று ஒரு சவரன்: ரூ.75,200
* ஆக.6ம் தேதி, ஒரு சவரன்: ரூ.75,040
* ஆக.5ம் தேதி, ஒரு சவரன்: ரூ.74,960
* ஆக.4ம் தேதி, ஒரு சவரன்: ரூ.75,360
* ஆக. 3ம் தேதி, ஒரு சவரன்: ரூ.74,320
* ஆக. 2ம் தேதி, ஒரு சவரன்: ரூ.74,320
* ஆக. 1ம் தேதி, ஒரு சவரன்: ரூ.73.200

Comments are closed.