திருச்சியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்- * அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட் 2) சென்னையில் தொடங்கி வைத்தார். அந்தவகையில் திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளியில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாமை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்து மருத்துவ முகாமை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் , ஆணையர் மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, கதிரவன், சௌந்தர பாண்டியன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், இந்த முகாமில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நோய் கண்டறியும் வசதிகள் உள்ளது. பல்வேறு பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்திற்கும் “அம்மா” என பெயர் வைத்தார்கள். தற்போது நாங்கள் வைக்கும் திட்டத்திற்கு முதல்வர் பெயரை பயன்படுத்தக்கூடாது என வழக்கு தொடுத்து உள்ளார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இதுகுறித்து நான் பேச விரும்பவில்லை. திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என எதிர்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். தற்போது ஓ.பி.எஸ் – ம் வெளியேறி உள்ளார். பல்வேறு விவகாரங்களில் இருந்து தப்பிப்பதற்காக தான் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். கிட்னி திருட்டு விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
*
Comments are closed.