திருச்சி அருகே அரசு பேருந்தின் மீது மின் கம்பம் சாய்ந்ததால் பரபரப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்! (வீடியோ இணைப்பு)
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரவானூருக்கு நகர பேருந்து ஒன்று இன்று( ஜூலை 28) சென்று கொண்டிருந்தது. அதில் 30க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இந்த பேருந்து உறையூர் அருகே உள்ள குழுமணி சாலையில் காமாட்சி அம்மன் கோவில் தெரு அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்தின் பின்பக்கம் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் அந்த மின்கம்பம் சரிந்து பேருந்தின் மீது விழுந்தது. இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறியபடி கீழே இறங்கினர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உடனடியாக அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் பேருந்தின் மீது சரிந்த மின்கம்பத்தை அகற்றியதோடு புதிய மின் கம்பத்தை நட்டனர். பின்னர் அந்த பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Comments are closed.