பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்தார். 26-ம் தேதி தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்தார். 27-ம் தேதி அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ராஜேந்திர சோழன் திருவாதிரை விழாவில் பங்கேற்றார். 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தனி விமானத்தில் டெல்லி சென்றார். பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘கோ பேக் மோடி’ என்று, சமூக வலைதளங்களில் ஒரு கருத்து வேகமாக பரவியது. அந்த கருத்தினை பதிவிட்ட நபர் யார் என்பது குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தியதில் உறையூர், சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (42) என்பவர் அதனை பதிவிட்டது தெரிய வந்தது.அதன்பேரில் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.