திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி பகுதியில் நாளை (29.07.2025) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் வையம்பட்டி, கருங்குளம், ஆசாத் ரோடு, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூர், தாமஸ்நகர், ஆலத்தூர், ம.குரும்பபட்டி, வலையப்பட்டி, நடுப்பட்டி, கல்கொத்தனூர், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்கு பகுதி), செக்கணம், களத்துப்பட்டி, ஜக்கம்பட்டி, மணியாரம்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னணியாறு அணை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல,
திருச்சி நீதிமன்றம் அருகே அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 29) பாரமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக மாநகராட்சிக்குள்பட்ட புதுரெட்டித் தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பங்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டித் தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ்சான்ட்ரியா சாலை, எஸ்பிஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னர்ஸ் சாலை, அண்ணா நகர், குத்பிஷா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழச்சத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, தென்னூர், புத்தூர், அருணா திரையரங்கு பகுதி, கணபதிபுரம், வட்டாட்சியர் அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, நீதிமன்ற பகுதி, அரசு பொது மருத்துவமனை, பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் பகுதி, கூனி பஜார், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் சாலை, ஈவெரா சாலை, வயலூர் சாலை, பாரதி நகர் ஆகிய இடங்களில் நாளை காலை 9.45 முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.