Rock Fort Times
Online News

இந்த ஆண்டு 12 ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டம்… * திருச்சியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி!

திருச்சி விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜூலை 30- ந் தேதி நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உள்ளது. இதில் 2 முக்கிய விஷயம் உள்ளது. மழைக்காலம் மற்றும் பருவ காலங்களில் மேகமூட்டங்கள் இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகைப்படம் எடுக்க முடியும். மற்றொன்று பேரிடர் காலங்களை முழுமையாக கண்காணித்து தெளிவான தகவல்களை தர முடியும். இந்த செயற்கைகோள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆண்டு 12 ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பல்வேறு தொழில்நுட்பங்கள் பொருந்திய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆளில்லாத செயற்கைக்கோளை இந்த மாதம் டிசம்பரில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்திய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய அனைத்து வகையான திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். குறிப்பாக சிந்தூர் போரில் நமது செயற்குழு மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பாதையில் எங்களுடைய பணிகளும் இருக்கும். அதற்காக பல திட்டங்களை உருவாக்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்