Rock Fort Times
Online News

“கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” கேட்டு புதிதாக 2.50 லட்சம் பேர் விண்ணப்பம்…!

தமிழகத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” என்ற திட்டத்தின் கீழ் அவர்களது வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1000
செலுத்தப்பட்டு வருகிறது. இதில் சில பெண்களுக்கு உரிமை தொகை இன்னும் கிடைக்கவில்லை என்று புகார்கள் சென்றன. இதனை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு, மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாதவர்கள் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் விண்ணப்பம் கொடுத்து பயன்பெறலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் மனு அளித்து வருகின்றனர். அந்தவகையில் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி மனு அளித்திருப்பவர்கள் எண்ணிக்கை 2.50 லட்சத்தை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் தகுதியானவர்கள் கண்டறியப்பட்டு 45 நாட்களில் தகவல் தெரிவிக்கப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு ரூ.1000 வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட் மாதம் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்