Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட் பழக்கடைக்குள் புகுந்து வியாபாரி மீது சரமாரி தாக்குதல்- தப்பி ஓடிய 3 பேருக்கு வலை…!

திருச்சி, பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் அருண் (வயது 30 ). இவர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் பழக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல இவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது 3 நபர்கள் குடிபோதையில் அங்கு வந்து பழங்களை எடுத்து பார்த்தனர். பழங்கள் வாங்குவது தொடர்பாக அவர்களுக்கும், வியாபாரிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 நபர்களும் வியாபாரி அருணை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை பார்த்ததும் அந்த 3 நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசில் அருண் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்கு பதிந்து, வியாபாரியை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்