யூடியூப் சேனல் பேட்டியின்போது நெறியாளரிடம் கண்ணிய குறைவாக நடந்துகொண்ட திருச்சி வேலுச்சாமிக்கு கண்டனம்…! ( வீடியோ இணைப்பு)
யூடியூப் சேனல் பேட்டியின்போது, நெறியாளரிடம் கண்ணிய குறைவாக நடந்துகொண்ட திருச்சி வேலுச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் திருச்சி வேலுச்சாமி என்பவர் தற்போதுள்ள காங்கிரஸை சேர்ந்தவரே அல்ல. இவர் பழைய ஸ்தாபன காங்கிரஸ்காரர். இவரை ஜனதா வேலுச்சாமி என்றால்தான் ஓரளவுக்கு தெரியும். இவரது வயதிற்கும், பேச்சிற்கும் எப்போதுமே சம்மந்தம் இருக்காது. நடைமுறைக்கு ஒத்துவராத அதர பழசான விசயங்களை பேசுகிற ஒரு தற்குறி. இவருக்கு சில விசயங்கள் தெரியும். பல விசயங்கள் தெரியாது. ஆனால், எல்லாம் தெரிந்த மேதையை போல பேசுவார். காமராஜரை தெரிந்த ஒரே காரணத்திற்காக இவர் ஒருவரே பெருந்தலைவரின் சோல்-ஏஜெண்ட் போல அளந்துவிடுவார். பொய், புனைசுருட்டுகளை அள்ளிவிடுவார். உண்மையை சொல்லப்போனால், இவர் ஜவஹர்லால் நேரு குடும்பத்திற்கு எதிரி. மிக சமீபத்தில் “சாட்டை” யூடியூப் சேனலுக்கு இவர் பேட்டியளித்தார். அப்போது நெறியாளர் ராஜேந்திரன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லாமல், நெறியாளரை பார்த்து “உங்க அம்மாவிடம் போய் கேள். நீ யாருக்கு பிறந்தாய் என்று என கடுமையான சொற்களை பயன்படுத்தி நெறியாளரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறார் வேலுச்சாமி. மேலும் நெறியாளரை ‘போடா’ என்றும் ஒருமையில் திட்டியிருக்கிறார். எவ்வளவு தரங்கெட்ட வார்த்தை? நீ யாருக்கு பிறந்தாய்? என வேலுச்சாமியை பார்த்து நெறியாளர் கேட்டிருந்தால், நாறி போயிருக்கும். சரி பேட்டியின் சாரம்சம் என்னவென்று பார்த்தால், திருச்சி வேலுச்சாமியின் குரூர புத்தி அம்பலமாகிவிடும்.
“1969ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வி.வி.கிரி என்கிற பார்பனியருக்கு திமுக ஓட்டு போட்டது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நீலம் சஞ்சீவ ரெட்டிக்கு ஓட்டு போட சொன்னார் பெரியார்” என்று சொல்லிக்கொண்டிருந்த வேலுச்சாமியை இடைமறித்து “சஞ்சீவ ரெட்டி தெலுங்கர் என்பதாலா?” என எதார்த்தமாக கேட்ட நெறியாளரை பார்த்து அவரது பிறப்பு குறித்தும், ‘போடா’ என்று ஒருமையில் பேசியும், பேட்டியை விட்டு எழுந்து போய்விட்டார் திருச்சி வேலுச்சாமி. ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஆந்திராவை சேர்ந்த நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து அப்போதைய காங்கிரஸ் பிரதமராக இருந்த இந்திரா காந்தியே போட்டி வேட்பாளராக வி.வி.கிரியை களமிறக்கினார். இதுதான் வரலாறு. அப்போது தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த கலைஞரை நேரில் சந்தித்து வி.வி.கிரி ஆதரவு திரட்டினார். சஞ்சீவ ரெட்டி பல வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுபோனார். இந்திராகாந்தியின் ஆதரவு பெற்ற வி.வி.கிரி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் சாதி என்கிற பிரச்சனைக்கே இடமில்லை. 1969 ஜனாதிபதி தேர்தலை சாதிய பிரச்சனையாக்கிய, ஜாதிய வெறியன்தான் இந்த திருச்சி வேலுச்சாமி. யார் இந்த வேலுச்சாமி? கரூர் மாவட்டத்தில் உள்ள நச்சலூர் கிராமத்தில் பிறந்து திருச்சியில் செட்டிலானவர் இவர். பழைய திருச்சி 2வது தொகுதியில் ஜனதா கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கு இவர் போட்டியிட்ட போது, திமுக வேட்பாளர் அன்பில் பொய்யாமொழியையும், அவரது தந்தை அன்பில் தர்மலிங்கத்தையும் தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பி பேசிய காரணத்தினால், திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய வாசலில், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்திடம் அடிவாங்கியவர்தான் இந்த வேலுச்சாமி.
கடந்த காலங்களில் ஜவஹர்லால் நேரு குடும்பத்தை தரம் கெட்ட வார்த்தைகளால் விமர்சித்து பேசியவர் இவர். 2001ம் ஆண்டுதான் காங்கிரஸில் சேர்ந்தார். ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக கூறப்படும் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனை ஆதரித்து பேசி வருபவர். பிரபாகரன் உயிரோடு இருப்பது எனக்கு மட்டுமே தெரியும் என்றுகூட பேசி வருகிறார். இவரை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக வைத்திருந்தால், அக்கட்சி எப்படி உருப்படும்? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகுந்தன், திருச்சி வேலுச்சாமியை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என்று ராகுல்காந்திக்கு புகார் அனுப்பியுள்ளார். இதேபோல பலரும் காங்கிரஸ் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சி வேலுச்சாமி தனது அதிகபிரசங்கி தனத்தால், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனால் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். திருச்சி மெயின்கார்டுகேட்டில் இருந்த பழைய மாடர்ன் லாட்ஜில் பெண்களுடன் வேலுச்சாமி அடித்த லூட்டியை கேள்விப்பட்டு ரைய்டு நடத்திய கோட்டை போலீசாரிடம் இவர் துடுக்காக பேசி, அடி வாங்கிய கதை மற்றும் வேலுச்சாமியை காட்டூர் ஜெயபால் காப்பாற்றிய கதை என எதையுமே பழைய காங்கிரசார் யாரும் மறக்கவில்லை. தனிமனித வாழ்க்கையில் மது, மாமிசம் இல்லையென்றாலும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியதாலே சுப்பிரமணியசுவாமி இவரை துரத்தி விட்டார். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவன் என்று திருச்சி வேலுச்சாமியை பற்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒருமுறை சொன்னார். திருச்சி ரயில்வே ஜங்சன் ராக்கின்ஸ் ரோட்டில் லாட்டரி சீட்டு கடை நடத்தி வந்த கனகராஜ் என்பவர், திருச்சி வேலுச்சாமி வீட்டில் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது பற்றி விசாரித்தால், வியக்க வைக்கும் செய்திகள் பல வெளியாகும். இந்த வேலுச்சாமிதான் ஏதோ உத்தமன்போல நெறியாளரின் பிறப்பு குறித்து பேசுகிறார். இவரது யோக்கியதை மலைக்கோட்டை மாவட்ட காங்கிரசார் மத்தியில் நாறி நாற்றமெடுக்கிறது. இன்னும் சில உண்மைகளை சொன்னால், அது திருச்சி வேலுச்சாமிக்குதான் அசிங்கம். இனியாவது தன்னிலை உணர்ந்து பத்திரிகையாளர்களிடம் மட்டுமில்லாமல், அனைவரிடமும் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். இதுதான் திருச்சி வேலுச்சாமிக்கு நல்லது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.