Rock Fort Times
Online News

திருச்சி ட்வின்ஸ் கார்ஸில் ஆடி சிறப்பு விற்பனை மேளா… திரைப்பட நடிகர் காளையன் துவக்கி வைத்தார்!

திருச்சி, காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் இயங்கிவரும் ‘ட்வின்ஸ் கார்ஸ் ப்ரீ ஓவ்ன்ட் கார்’ ஷோரூமில் ஆடி சிறப்பு விற்பனை மேளா துவக்க விழா நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் மதுரை காளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை ட்வின்ஸ் கார்ஸ் நிறுவனர் ஏ. பக்ருதீன் வரவேற்றார். இச்சிறப்பு விற்பனை மேளா குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது., வருகிற ஆகஸ்ட் 17 வரை எங்களது நிறுவனத்தில் இச்சிறப்பு கார் விற்பனை மேளா நடைபெறுகிறது. பேசிக் மாடல் மாருதி சுசூகி வகை கார்களில் தொடங்கி, கியா டொயோட்டா ஹூண்டாய், ஆடி, பென்ஸ் போன்ற முன்னணி சொகுசு கார்கள் வரை அத்தனை மாடல் ப்ரீ ஓவ்ன்ட் கார்களையும் ஒரே இடத்தில் வாடிக்கையாளர்கள் பார்த்து வாங்கிக் கொள்ளலாம். கார் வாங்குவதற்கு தேவையான பைனான்ஸ் வசதிகளையும் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம். இச்சிறப்பு கார் விற்பனை மேளாவில் கார்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என்றார். உங்களுக்கும் கார் விற்பது – வாங்குவது குறித்த ஆலோசனைகள் தேவைப்பட்டால் இதுதான் ட்வின்ஸ் கார்ஸ் நிறுவனர் ஏ.பக்ருதீனின் செல்போன் எண் : 86080 80248

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்