சிவாஜி கணேசன் நினைவு நாள்: திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை…!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24-வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புத்தூரில் உள்ள சிவாஜி கணேசனின் உருவ சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்,சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா, பகுதி கழக செயலாளர்கள் மோகன்பாபு, ராஜ்முஹம்மது, மணிவேல், ஏ.எம்.ஜி.விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்று சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
Comments are closed.