Rock Fort Times
Online News

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து…!

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்ற நிலையில் ‘சீட்’ எதுவும் ஒதுக்கப்படவில்லை. ஆனால், அந்த கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படும் என ஒப்பந்தமானது. அதன்படி, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார். இம்மாதம் ஜூலை 25-ம் தேதி அவர் நாடாளுமன்றத்தில் பதவியேற்கவுள்ளார். அவருக்கு ரஜினிகாந்த், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கமல்ஹாசனைச் சந்தித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்