திருச்சியில் வாகன சோதனையின் போது போலீசாரை மதிக்காமல் வேகமாக சென்ற வாலிபரை விரட்டி பிடித்த போலீசார்…!
திருச்சி, எடமலைபட்டிபுதூர் பகுதியில் உள்ள தேவாலயம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சாலை விதிகளை மீறி அதிவேகமாக ஒரு பைக் போலீசாரை கடந்து சென்றது. இதைதொடர்ந்து போலீசார் அந்த பைக்கை பின்தொடர்ந்து விரட்டிச் சென்று பிடித்தனர். அப்போது அந்த வாலிபர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிராப்பட்டி ஐந்தாவது தெருவை சேர்ந்த அசீர் முகமது (25 )என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து பைக் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
Comments are closed.