தமிழகத்தில் டிஎஸ்பி, துணை கமிஷனர் உட்பட 40 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்… * மானாமதுரை டி.எஸ்.பி.யாக பார்த்திபன் நியமனம்…
தமிழ்நாட்டில் அவ்வப்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதேபோன்று சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் தலைதூக்கும்போது காவல்துறையிலும் மாற்றங்கள் நிகழ்வது வழக்கம். அந்தவகையில் தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக, துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் என 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை, கடலூர், திருப்பத்தூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காவல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடி டிஎஸ்பியாக இருந்த பார்த்திபன், மானாமதுரை டி.எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் அஜித்குமார் மரணத்தை தொடர்ந்து மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி.யாக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித்குமார் வழக்கில் இன்று ( ஜூலை 14) சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில், புதிய டிஎஸ்பி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.