Rock Fort Times
Online News

பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா…! வீர வரலாற்றினை பாடப்புத்தகத்தில் சேர்க்கவும் வலியுறுத்தல்!

பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சியில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா தலைவர் பாரதராஜா யாதவ் தலைமையில் நடைபெற்றது. பா.மு.க.அமைப்புச் செயலாளர்கள் எம்.ஆர்.இராமச்சந்திரன், கீரனூர் வே.செல்வம், தமிழ் மாநில யாதவ மகாசபை ஒருங்கிணைப்பாளர் எம்.திருவேங்கடம் யாதவ், யாதவர் சங்கம் இளவரசு, காந்தி சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகி மூர்த்தி யாதவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் டிரஸ்டி பார்த்திபன், முன்னாள் டிரஸ்டி மீசை ராசு ஆகியோர் வரவேற்று பேசினர்.

விழாவில் மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர்குமார், சமாஜ்வாடி நீலமேகம் யாதவ், வழக்கறிஞர்கள் கோவிந்தராஜ், சந்துரு, சிந்தை சரவணன், திமுக பிரமுகர்கள் செந்தில்குமார், மார்க்கெட் குமார், தொழிலதிபர் சத்தியமூர்த்தி, தொ.மு.ச.இரானலிங்கம், அதிமுக நிர்வாகிகள் எம்.மகாலிங்கம், டைமண்ட் தாமோதரன், பி.ஜே.பி.யை சேர்ந்த பெருமாள், பார்த்தசாரதி, விஜயகுமார், மண்டல் தலைவர் அனிதாசசிக்குமார், மண்ணச்சநல்லூர் செல்வம், விக்கிரமாதித்தன், சி.நந்தகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மேலும், விழாவில் பகுதி பிரமுகர்கள் வி.ஆர்.என்.பாலாஜி, முத்துகிருஷ்ணன், டி.சரவணன், எஸ்.செந்தில்முருகன், உறையூர் ஹரி, மார்க்கெட் சுப்பிரமணி, திருவெறும்பூர் சங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து முதல் சுதந்திர மாவீரர் அழகுமுத்துக்கோனின் புகழை எடுத்துரைத்தும், உடனடியாக மாவீரர் அழகுமுத்துக்கோனின் வீர வரலாற்றினை பாடப்புத்தகத்தில் சேர்த்திட வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர். முடிவில் பா.மு.க. இளைஞரணி தலைவர் ஜி.எம்.வினோத்பாண்டி நன்றி கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்