Rock Fort Times
Online News

சுதந்திரப் போராட்ட வீரன் அழகு முத்துகோன் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு வைகோ மலர்தூவி மரியாதை…!

திருச்சி மத்திய மண்டல மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சியில் இன்று( ஜூலை 11) நடைபெறுகிறது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி.உள்ளிட்டோர் திருச்சிக்கு வருகை தந்தனர். கூட்டத்திற்கு புறப்படுவதற்கு முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரன் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தங்கி இருந்த விடுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு வைகோ மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி,. எம்.எல்.ஏ.பூமிநாதன், கட்சியின் துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரெஹையா, மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்