“தகைசால் தமிழர் விருது”க்கு தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து…!
தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றுபவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் “தகைசால் தமிழர் விருது” வழங்கப்படுகிறது. அதன்படி, 2021ம் ஆண்டு தொடங்கி கடந்த 4 ஆண்டுகளில், சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, ஆசிரியர் கி. வீரமணி, முனைவர் குமரி அனந்தன் ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர். இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தகைசால் தமிழர் விருது பெரும் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனை திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தனது பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார். அப்போது, தான் ஆசிரியராக பொறுப்பேற்று நடத்தும் “மணிச்சுடர்” 40வது ஆண்டு மற்றும் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு மலரை காதர் மொய்தீன், அமைச்சரிடம் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட அமைச்சர், தான் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை” நூலினை பேராசிரியருக்கு வழங்கினார். இந்த நிகழ்வின்போது திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Comments are closed.