திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று( ஜூலை 9) காலை வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் திண்டுக்கல் அருகே வந்த போது திடீரென ஒரு பெட்டியில் உள்ள ஏ.சி.யில் கோளாறு ஏற்பட்டு புகை வெளியேறியதால் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த ரயில் வடமதுரை அருகே வேல்வார்கோட்டை என்ற இடத்தில் அரை மணி நிறுத்தி வைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயிலின் வேகத்தை குறைத்து திருச்சிக்கு இயக்கப்பட்டது. அங்கு பொறியாளர்கள் மூலம் மீண்டும் சரிபார்க்கப்பட்ட பின்னர் சென்னைக்கு ரயில் புறப்பட்டு செல்லும் என்று கூறப்படுகிறது.
Comments are closed.