திருச்சிக்கு நாளை (ஜூலை 9) வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திரண்டு வாருங்கள்… * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.- திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவள விழா ஆண்டின் துவக்க விழா, குளோபல் ஜமாலின்ஸ் கட்டிட திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை (ஜூலை 9) காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை தர உள்ளார். அவருக்கு நமது தெற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட , மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, வட்ட, வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் அணிகளின் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.