பேருந்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டதால் ஆத்திரம்: திருச்சியில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது…!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கீழகல்கண்டார் கோட்டைக்கு அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. குமார் என்பவர் அந்தப் பேருந்தை ஓட்டினார். காந்தி மார்க்கெட் மகாலட்சுமி நகர் நிறுத்தம் அருகில் பேருந்து வந்தபோது பஸ்சில் இருந்த சங்கரன் (வயது 32) என்ற வாலிபர் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது வீசியதில் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து ஓட்டுனர் குமார் காந்தி மார்க்கெட் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த சங்கரனனை கைது செய்தனர்.
Comments are closed.