Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி 28-வது வார்டில் சாலையோர பூங்கா…- * மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்தார்!

திருச்சி மாநகராட்சி 28-வது வார்டில் சாலை மற்றும் தெரு ஓர சந்திப்புகளில் பொதுமக்களால் குப்பை கொட்டி அசுத்தம் செய்யப்படுகிறது. அந்த பகுதிகளை கண்டறிந்து குப்பைகளை அகற்றி சிறிய பூங்காவாக அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அண்ணாநகர் முதல் குறுக்கு தெரு முதல் இரண்டாம் குறுக்கு தெரு வரை உள்ள பகுதியை அழகுப்படுத்தி பூங்கா அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பைஸ் அகமது, கமால் முஸ்தபா மற்றும் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், மகளிர் சங்க நிர்வாகிகள், வேதா நிறுவனத்தின் பொறுப்பாளர் அய்யப்பன் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான பணி வார்டு மேற்பார்வையாளர் நளினி தலைமையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்