தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும் அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு உகந்தது என்று திருச்சி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சீமான் தரப்பின் சார்பாக முறையீடு செய்யப்பட்டிருந்தது.அந்த வழக்கானது இன்று( ஜூலை 2) நீதிபதி விக்டோரியா கௌரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். இந்நிலையில் திருச்சியில் விசாரிக்கப்பட்டு வரும் சீமான் மீதான அவதூறு வழக்கிற்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டதோடு வழக்கை வருகிற ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Comments are closed.