லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: * மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்றது…!
லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. உடனே, விமானி லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் அந்த விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்று தரை இறங்கியது. புறப்பட்ட 37 நிமிடத்தில் மீண்டும் லண்டனில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 270 பேர் உயிரிழந்தது நினைவு கூறத்தக்கது.
Comments are closed.