Rock Fort Times
Online News

செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்..!

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021-23ம் ஆண்டுகளில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்தது.தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2021 – 23ம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய,ஆயிரத்து,182 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஒப்பந்ததாரர்கள் லாபமடையச் செய்ததன் மூலம் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்