குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி இன்று (12-06-2025) மதியம் 1-38 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதுடன் தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்த நிலையில் அவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் இருந்தது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தாலும் இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி பயணம் செய்துள்ளார். அவரும் உயிர் இழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை இன்னும் குஜராத் அரசு உறுதி செய்யவில்லை. இந்த விமான விபத்துக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கலில், ஆமதாபாத் துயரச் சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை நொறுக்கி விட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உதவுவதைக் கண்காணித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி எம்பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து இதயத்தை உடைக்கிறது. பயணிகள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்கள் உணரும் வலி மற்றும் பதட்டம் கற்பனை செய்ய முடியாதது. ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்டவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி இன்று(12-06-2025) மதியம் 1-38 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதுடன் தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்த நிலையில் அவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் இருந்தது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தாலும் இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த
விபத்தில் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி பயணம் செய்துள்ளார். அவரும் உயிர் இழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை இன்னும் குஜராத் அரசு உறுதி செய்யவில்லை. இந்த விமான விபத்துக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கலில், ஆமதாபாத் துயரச் சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை நொறுக்கி விட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உதவுவதைக் கண்காணித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி எம்பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து இதயத்தை உடைக்கிறது. பயணிகள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்கள் உணரும் வலி மற்றும் பதட்டம் கற்பனை செய்ய முடியாதது. ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்டவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Comments are closed.