மகளிர் சுய உதவி குழு தின விழா: திருச்சியில் பயனாளிகளுக்கு ரூ.121 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்…!
மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கிக் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல மற்ற மாவட்டங்களுக்கு காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து திருச்சி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கலந்துகொண்டு 1,272 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.121.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில்
மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், உதவி ஆணையர் சண்முகம், மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் சுரேஷ், மண்டலக்குழுத் தலைவர் துர்கா தேவி, கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.