மகாராஷ்டிரா மாநிலத்தில், புறநகர் பகுதிகளில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் இன்று(09-06-2025) காலை தானே ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு ஒரு ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் மும்பாரா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பத்துக்கும் மேற்பட்டோர் படிக்கட்டில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தனர். இதில் 5 பேர் பலியானதோடு 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments are closed.