திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்…!* தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு பங்கேற்பு
திருச்சி பழைய பால்பண்ணை வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கம் சார்பில் கண், காது, பல் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தொடங்கி வைத்தார். திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் செந்தில் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கத்தின் தலைவர் எஸ்.வெள்ளையப்பன்,துணைத் தலைவர் கே.வெள்ளையன், செயலாளர் ஏ.தங்கராஜ், பொருளாளர் ஏ.நல்லுசாமி மற்றும் நிர்வாகிகள் பாஸ்கரராகவன், செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை திருச்சி வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.
Comments are closed.