10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாக நாளை பாராட்டு விழா… * விருது வழங்கி கவுரவிக்கிறார் விஜய்!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் சிறப்பிடம் பெரும் மாணவ, மாணவிகளை ஆண்டுதோறும் விஜய் விருது வழங்கி கவுரவித்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் பாராட்டு விழா கடந்த மே 30ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்தநிலையில் இரண்டாவது கட்ட பாராட்டு விழா நாளை( ஜூன் 4) சென்னையில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து, விருது வழங்கிப் பாராட்டி வருகிறார். முதல் கட்டமாக கடந்த 30.05.2025 அன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாவது கட்ட விழா, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் நாளை (04.06.2025) நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பின்வரும் மாவட்டங்களில், குறிப்பிடப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகள், கரூர் மாவட்டத்தில் உள்ள, 4 சட்டமன்ற தொகுதிகள், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகள், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகள, நெல்லை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள், திருப்பூரில் உள்ள
8 சட்டமன்ற தொகுதிகள், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள், தென்காசி மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகள், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் விழுப்புரத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகள் என மொத்தம் தமிழ்நாட்டின் 76 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் நாளை விஜயால் கவுரவிக்கப்பட உள்ளனர். இதுபோக, புதுச்சேரியைச் சேர்ந்த 9 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவர்களும் இந்த நிகழ்வில் கவுரவிக்கப்பட உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.