1500 பேருக்கு அசத்தலான அன்னதானம் ! திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்குமாரை மனமாற வாழ்த்திய பொதுமக்கள்…!
திருச்சி, வரகனேரி பெரியார் நகரை சேர்ந்தவர் ஏ.வெங்கடேஷ்குமார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தீவீர ஆதரவாளரான இவர், திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் வசித்துவரும் வரகனேரி, அண்ணாநகர் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் இன்று ( மே.29) திருவிழா அமர்க்களமாக ஆரம்பமானது. இதையொட்டி திமுக பிரமுகரான வெங்கடேஷ்குமார் சுமார் 1500 பேருக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளார். அன்னதானத்திற்காக அப்பகுதியிலுள்ள மண்டபத்தில் பிரத்தியேகமாக தயாரான காளான் பிரியாணி, கைமா புரோட்டா,காளிஃபிளவர் 65,கோதுமை அல்வா, தயிர் சாதம், தால்சா சகிதம் தயாரான உணவுகளை பொதுமக்கள் வாங்கி உண்டு பசியாறினர். இதுகுறித்து நம்மிடம் வெங்கடேஷ்குமார் பேசியதாவது.,
“கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வருடமும் திருவிழா சமயத்தில் எங்கள் பகுதி மக்களுக்கு விருந்து வைத்து பரிமாறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. வேலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக வெளியூர்களில் வசிப்பவர்கள் திருவிழா சமயத்தில் ஒன்று கூடுவதே அலாதியான சந்தோஷத்தை கொடுக்கும். அப்படி நண்பர்கள், உறவினர்கள், நலன்விரும்பிகள் என அனைவரும் ஒன்றாக இருக்கும் போது எல்லோருக்கும் உணவிட்டு அழகுபார்ப்பது எனது தந்தையான அண்ணாதுரைக்கு மிகவும் பிடிக்கும். அவரது மறைவுக்குப்பிறகு இதை நான் சிறப்பாக செய்து வருகிறேன். இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி” என்றார்.
Comments are closed.