திருச்சி, எ.புதூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மேயர் மு.அன்பழகன் திடீர் ஆய்வு…!
கல்வியில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தமிழக பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளிகளும், ஏற்கனவே உள்ள பல பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளும் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி மண்டலம் எண்4, வார்டு எண் 57, எடமலைப்பட்டிபுதூர் ராஜீவ் காந்தி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாதிரி மாநகராட்சி உயரகட்டிடத்த பள்ளி கட்டிடத்தை மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது நகரப் பொறியாளர் பி. சிவபாதம், செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்ரமணியன், மண்டல தலைவர் துர்காதேவி, மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.