Rock Fort Times
Online News

வினாத்தாள் கசிந்ததாக புகார்:- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் இன்று(மே 27) ‘இண்டஸ்ட்ரியல் லா (தொழில்துறைச் சட்டம்)’ பாடப் பிரிவுக்கான தேர்வு நடைபெற இருந்தது. ஆனால், வினாத்தாள் கசிந்ததாக பெறப்பட்ட புகாரையடுத்து, சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 106 உறுப்பு கல்லூரிகளிலும் இன்று நடைபெறவிருந்த மேற்கண்ட தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு மே 30 அல்லது 31-ம் தேதி நடைபெறும் என்றும், இதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் கடைசி நேரத்தில் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஏமாற்றமடைந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்